மெட்ரிக்-குமாரபாளையம் மாணவி முதலிடம்
சென்னை: மெட்ரிக்குலேசன் 10ம் வகுப்பு தேர்வில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த மாணவி அபிராமி மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர்
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமி அம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தவர் ஆவார்.
2வது இடத்தில் 2 பேர்:
இரண்டாவது இடத்தை நாமக்கல் மாவட்டம், காவெட்டிபட்டியில் உள்ள குறிஞ்சி மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி மாணவர் கரமத்துல்லாவும்,
சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளி மாணவி வர்ஷா ராமனும் பிடித்துள்ளனர்.
இவர்கள் 488 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
3வது இடத்தில் 6 பேர்:
487 மதிப்பெண்கள் பெற்று 6 பேர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களது விவரம்:
1. ரஜப் பாத்திமா, பாரத் மான்டெஸ்சரி மெட்ரிகுலேசன் பள்ளி குற்றாலம், தென்காசி
2. சாந்தா மீனா டி.வி.எஸ்.மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளி, மதுரை
3. விக்ரம், ஸ்ரீவிஜய் வித்யா மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி, காந்தி நகர், தர்மபுரி
4. பிரியதர்ஷினி, இந்தியன் மெட்ரிக் குலேசன் மேல் நிலைப்பள்ளி, பறையபட்டி புதூர், தர்மபுரி
5. ஸ்ராவந்திகா லட்சுமி, ஆல்பா மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி. மேற்கு சி.ஐ.டி. நகர், சென்னை
6. சந்தியா, ஸ்ரீகிருஷ்ணசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளி, சென்னை
ஆங்கிலோ இந்தியன்-குன்னூர் மாணவி முதலிடம்:
ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குன்னூர் செயின்ட் ஜோசப் கான்வென்ட் மாணவி ஜோத்சனா 486 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
ஷிவானி, செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியப் பள்ளி, திருச்சி, அனுஸ்ரீ பன்சால், செயின்ட் கெவின்ஸ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஆகியோர் 485 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளனர்.
சோபியா, செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியப் பள்ளி, திருச்சி, வைஷ்ணவி, ரயில்வே மிக்ஸ்டு பள்ளி, பெரம்பூர் ஆகியோர் 484 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications