லஞ்சம்-கஸ்டம்ஸ் அதிகாரி கைது: சமையல் அறையில் ரூ. 28 லட்சம்
சென்னை: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களின் மதிப்பை, லஞ்சம் வாங்கிக் கொண்டு, குறைத்துக் காட்டி வரி விதிப்பதில் சலுகை காட்டிய சென்னை கஸ்டம்ஸ் அதிகாரியை சி.பி.ஐ கைது செய்தது.
அவரது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியபோது படுக்கையறை, சமையல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 28 லட்சம் ரொக்கம், ரூ. 30 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை ராஜாஜி சாலையில் சுங்க வரித் துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் வேணுகோபால் (43). வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மதிப்பீடு செய்து வரி விதிக்கும் அதிகாரி இவர்.
இந் நிலையில் ஒரு தனியார் நிறுவனம் கொரியாவில் இருந்து பழைய மெஷின்களை இறக்குமதி செய்தது. இந்த எந்திரங்களை ஆய்வு செய்த வேணுகோபால் அவை அனைத்தும் புதிய மெஷின்கள் போல் தெரிகிறது. அதனால், புதிய மெஷின்களுக்கான மதிப்பில் தான் வரி போடுவேன் என்றார்.
பழைய மெஷின்களாக் கணக்கிட்டு குறைந்த வரி போட வேண்டும் என்றால் எனக்கு ரூ. 25,000 தர வேண்டும் என்றார்.
ஆனால், இதை இறக்குமதி செய்தவர்கள், அவை பழையவை என்பதற்கான சான்றிதழ்களைக் காட்டியும் வேணுகோபால் கேட்கவில்லை. லஞ்சத்திலேயே குறியாக இருந்தார்.
இதையடுத்து சி.பி.ஐயிடம் அந்த நிறுவனம் புகார் தந்தது. சிபிஐயின் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி. முருகன் விசாரணையில் இறங்கினார். வேணுகோபாலை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்த சிபிஐ அவரிடம் பணத்தைத் தருமாறு கூறினர்.
இதையடுத்து அந்த நிறுவனத்தினர் ரூ.15,000த்தை முன் பணமாகக் கொடுத்தனர். அதை வேணுகோபால் வாங்கியபோது சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டே பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டிலும் திடீர் சோதனை நடத்தினர். அப்போது படுக்கையறை மற்றும் சமையல் அறையிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் ரூ. 28 லட்சம் இருந்தது.
மேலும் ரூ. 30 லட்சம் மதிப்பிலான சொத்து பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வேணுகோபால் கைது செய்யப்பட்டு்ள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications