ரயிலில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஜெவின் பாதுகாப்பு படையினர்
திருப்பூர்: ஓடும் ரயிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொட நாடு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது பாதுகாப்பு பணிக்காக தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ வீரர்கள் உடன் சென்றுள்ளனர்.
அதே போல சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தனபால் நேற்று முன் தினம் திருப்பூர் வந்தார். அவரது பாதுப்பு பணிக்கு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வந்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ வீரர்களும், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜனும் ரயில் மூலம் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ரயிலில் எஸ்-5 கோச்சில் பயணம் செய்த இவர்களுக்கு இடையே லக்கேஜ் வைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் சுந்தர்ராஜனுக்கு அடி உதை விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து சுந்தர்ராஜன் திருப்பூர் ரரயில்வே போலீஸ்ல் இது குறித்து புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தேசிய பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுபாஷ், காவலர்கள் ரத்தோர், ராஜேஸ் பிகாரி, ராஜீவ் குமார், சேகர், வினோத் குமார், சதாம் ஆகிய ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே சப்-இனஸ்பெக்டர் சுந்தராஜன் தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேரும் உடனே விடுவிக்கப்பட்டனர்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications