திருச்சி-சென்னை சேவை தொடங்கும் பாரமவுண்ட் ஏர்வேஸ்
திருச்சி: திருச்சி - சென்னை - திருச்சி மார்க்கத்தில், புதிதாக இரு தினசரி விமான சேவைகளை தொடங்கவிருப்பதாக பாரமவுண்ட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் 2வது வாரத்திலிருந்து இந்த புதிய விமான சேவை அமலுக்கு வருகிறது. தினசரி இரு முறை இந்த விமான சேவை மேற்கொள்ளப்படும் என பாரமவுண்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திருச்சி விமான நிலையத்தில் பாரமவுண்ட் நிறுவனத்தின் அலுவலகம் தொடங்கப்படும். தொடக்கத்தில், 70 சீட்கள் கொண்ட ஜெட் எம்பிரேயர் ரக விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
திருச்சி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளதால், திருச்சி விமான நிலையம், பெருமளவில் லாபம் தரும் விமான மையமாக திகழ்கிறது. மேலும் இங்கு ஐடி பூங்காவும் அமைக்கப்படவுள்ளதால், திருச்சி நகரின் தொழில் முக்கியத்துவம் மேலும் கூடியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விமான சேவை காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும்.
பாரமவுண்ட் நிறுவனத்திடம் 5 விமானங்கள் இருக்கிறது. தற்போது எட்டு பிரிவுகளில் 42 தினசரி சேவைகளை அது மேற்கொண்டு வருகிறது. ஜூலை மாதம் மேலும் 2 விமானங்கள் சேரவுள்ளன. 2010ம் ஆண்டுக்குள் 40 விமானங்களைக் கொண்டதாக இது விரிவுபடுத்தப்படும்.
திருச்சிக்கும், திருவனந்தபுரம், கொச்சிக்கு இடையே புதிய சேவையைத் தொடங்கவும் திட்டமிட்டு வருகிறோம்.
2011ம் ஆண்டு முதல் சர்வதேச விமான சேவையை தொடங்கவும் பாரமவுண்ட் திட்டமிட்டுள்ளது என்றார் தியாகராஜன்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications