சென்னையில் ரவுடிகள் வேட்டை - 1,322 பேர் கைது
சென்னை: சென்னையில் கொலைகள் தொடர் கதையாகி வரும் நிலையில் மீண்டும் ரவுடிகள், பழைய குற்றவாளிகளைப் பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் மாநகர கால்துறை ஆணையர் சேகர் பேசுகையில், குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னையில் கடந்த 3 நாட்களாக போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1, 322 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 71 பேர் ரவுடிகள், 94 பேர் பழையக்குற்றவாளிகள், 7 பேர் நீதி மன்ற பிடி வாரண்ட் நிலுவையில் உள்ளவர்கள், 1, 017 பேர் கெட்ட நடத்தை உடையவர்கள்.
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 89 பேர், ஹெல்மெட் அணியாத 1,400 பேர் அதிக வேகமாக வாகனங்களை ஓட்டிய 250 பேர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அண்மையில் சந்திரகாந்தன் என்ற டாக்டரிடம் நுங்கம்பாக்கம் ரெயில்வே ஸ்டேஷன் பின்புறம் கொள்ளையடித்த சுரேஷ், பிரான்சிஸ், அருண்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மற்றொரு வழக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடக மாடிய வியாசர் பாடியைச் சேர்ந்த முரளி மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 53 ஆயிரம் பணம் மீட்கப்பட்டது.
சென்னையில் விபத்துக்களை தடுக்கவும், வாகன நெரிசலை போக்கவும் போக்குவரத்து போலீசார் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக விபத்துக்கள் குறைந்துள்ளன. போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் இந்த ஆண்டு இதுவரை ரூ. 4.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
கோல்டு குவெஸ்ட் தங்கக் காசு மோசடி வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கிண்டியில் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றார் சேகர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications