தஞ்சை வாலிபர் உடல்-பிரதமருக்கு வைகோ கடிதம்
சென்னை: சிங்கப்பூர் சிறையில் மர்மமான முறையில் இறந்த தஞ்சை வாலிபரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சி்ங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
சிங்கப்பூருக்கு 1997ஆம் ஆண்டு வேலைக்கு சென்ற தஞ்சை மாவட்டம் நெம்மேலி வடக்கு கிராமத்தை சேர்ந்த காட்டுராஜா என்பவர் சிறையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்துள்ளார். அவரது தந்தையின் வேண்டுக்கோளுக்கிணங்க காட்டுராஜாவின் மரணம் குறித்த செய்தியை தங்களின் உடனடி கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
காட்டுராஜா கடந்த 1997ம் ஆண்டு ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் சிங்கப்பூருக்கு வேலை தேடிச் சென்றார். அவரது உண்மையான தமிழக முகவரியை அங்கு பதிவு செய்து இவ்வளவு காலமாக அங்கு தங்கியுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் கடந்த 22ம் தேதி அன்று அவர் மர்மமான முறையில் சிறையில் இறந்துள்ளார். காட்டுராஜாவின் உறவினர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, காட்டுராஜா கடந்த 22ம் தேதி இறந்ததை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்ப அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இறந்தவரின் குடும்பத்தினர் துயரத்தில் தவிக்கின்றனர்.
சிங்கப்பூர் சிறையில் இறந்த தமிழக வாலிபர் காட்டுராஜாவின் உடலை உடனடியாக அவரது சொந்த ஊருக்கு, அனுப்புவதற்காக நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.
காங். தோல்வி நிச்சயம்:
இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த மதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பேசிய வைகோ,
மதிமுக தனி மரமாக தன் கையால் தானே நின்று வளர்ந்த கட்சி. கடந்த 15 ஆண்டுகளாக பல இன்னல்களுக்கு மத்தியில் வீறு நடை போட்டு வருகிறது. கட்சியின் 15வது மாநாடு வருகிற 18ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அனுப்பியுள்ள சிறப்பு வாழ்த்து செய்தியில், மதிமுகவின் ஒவ்வொரு சொல்லும், செயலும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடின்மையால் விலைவாசி கட்டுக் கடங்காமல் எங்கோ சென்று விட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி நிச்சயம் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், காரைக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
தூத்துக்குடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலை தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. காரைக்குடியிலும் இந்த ஆலை வந்தால் அதை தடுக்க முயற்சி செய்வேன் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications