சென்னையில் சாதாரண பெட்ரோல் திடீர் நிறுத்தம்-மக்கள் பெரும் அவதி!

சென்னை: சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் சாதாரண பெட்ரோல் விற்பனை திடீரென முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. விலை அதிகமான ப்ரீமியம் மற்றும் எக்ஸ்ட்ரா ப்ரீமியம் பெட்ரோல் மட்டுமே விற்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும், அவதியும் அடைந்துள்ளனர்.
சமீபத்தில் பெட்ரோல், டீசல், காஸ் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் குமுறலுடன் உள்ள நிலையில், தற்போது சென்னை போன்ற பெருநகர வாசிகளுக்கு புதிய அதிர்ச்சி
வந்துள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பெருநகரங்களில் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ப்ரீமியம், எக்ஸ்ட்ரா ப்ரீமியம் ஆகிய விலை அதிகமான பெட்ரோல், டீசலே விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சாதாரண பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.54 ஆகும். ஆனால் ப்ரீமியம், எக்ஸ்ட்ரா ப்ரீமியம் வகை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 59 ஆகும். அதேபோல சாதாரண டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 34 ஆகும். அதுவே ப்ரீமியம் டீசல் என்றால் லிட்டருக்கு ரூ. 39 வரை விலை வருகிறது.
திடீரென சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர். இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு என்ன எரிபொருள் அனுப்பப்படுகிறதோ, அதைத்தான் நாங்கள் விற்கிறோம்.
சென்னை முழுவதும் சாதாரண பெட்ரோல், டீசல் சப்ளையை, இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட எண்ணை நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. சென்னை மட்டுமல்ல, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களிலும் இதே நிலைதான் என்கின்றனர்.
அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலை கொண்ட ப்ரீமியம், எக்ஸ்ட்ரா ப்ரீமியம் பெட்ரோல், டீசல் விற்பனையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications