இலங்கை கடற்படை முகாம் மீது கடற்புலிகள் தாக்குதல்-7 பேர் பலி

வட மேற்கில் உள்ள மன்னார் கடல் பகுதியில், இலங்கை கடற்படை முகாம் மீது இன்று அதிகாலை கடல் புலிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
சில மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 4 கடல் புலிகளும், 3 கடற்படையினரும் கொல்லப்பட்டனர். கடற்படை வசம் இருந்த ரேடார் சாதனம், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அப்பகுதி தற்போது தங்களது வசம் வந்து விட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் கடல் புலி பிரிவின் தலைவர் ஸ்ரீராமனும் அடக்கம் என இலங்கை பாதுகாப்புத் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கடற்படை வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எருக்கலம்பிட்டி என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அதிகாலை 2.15 மணியளவில் 6 படகுகளில் வந்து கடற் புலிகள் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டனர்.
கடற்படையினருக்கு ஆதரவாக விமானப் படையும் தாக்குதலில் ஈடுபட்டது. விமானத் தாக்குதலைத் தொடர்ந்து கடற் புலிகள் தங்களது படகுகளோடு வெட்டித்தலைத்தீவு பகுதிக்கு தப்பி ஓடி விட்டதாகவும் பாதுகாப்புத் துறை தகவல் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதலில் கடற்படையின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டது என்றும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications