கார்கள் மீதான வரி அதிகரிப்பு-விலைகள் சர்..!
டெல்லி: மத்திய ரக மற்றும் பெரிய கார்கள் மீது கூடுதலாக ரூ. 20,000 வரை மத்திய அரசு உற்பத்தி வரியை அதிகரித்துள்ளது. இதனால் இந்த கார்களின் விலை உயரவுள்ளது.
கார்கள் மீது ஏற்கனவே 24 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையி்ல் அதிக அளவில் எரிபொருளை பயன்படுத்தும் கார்கள் மீது இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
1500 சி.சி. திறன் என்ஜின் கொண்ட மத்திய ரக கார்களுக்கு ரூ.15,000மும் 2000 சி.சி. திறன் என்ஜின் கொண்ட பெரிய கார்களுக்கு ரூ.20,000 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரும்பு விலை உயர்வால் கார்களின் விலைகள் உயர்த்தப்பட இருந்தன. இந் நிலையில் கூடுதல் வரியையும் போட்டுத் தாக்கியுள்ளது மத்திய அரசு.
இந்த வரி உடனடியாக அமலுக்கு வருவதால் பெரிய கார்களின் விலை ரூ. 25,000 முதல் ரூ. 35,000 வரை உடனடியாக உயரவுள்ளது.
குறிப்பாக மாருதி எஸ்எக்ஸ்4, ஹோண்டா சியல், ஹூயுண்டாய் வெர்னா, ஹோண்டா அகார்ட், ஹோண்டா ரிவிக், ரேனால்ட் லோகன், ஸ்கோடா, டாடா சபாரி, மகிந்திரா ஸ்கார்ப்பியோ, பொலீரோ, டயோட்டா இன்னோவா ஆகியவற்றின் விலை உயரப் போகிறது.
அதே நேரத்தின் இரும்பின் விலையை குறைக்கும் வகையில் இரும்புத் தாது மீதான ஏற்றுமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள் நாட்டு பயன்பாட்டுக்கு இந்த பொருட்கள் தாராளமாக கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications