முஷாரப்புக்கும் பூட்டோ கதிதான்: ஷெரீப் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பூட்டோவுக்கு ஏற்பட்ட கதிதான் அதிபர் முஷாரப்புக்கும் நேரும் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் அருகே, வக்கீல்கள், முஸ்லீம் லீக் கட்சியினர் உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாபெரும் கூட்டத்தை நடத்தினர். இதில் ஷெரீப் சிறப்புரையாற்றினார். அப்போது முஷாரப்புக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது ஷெரீப் பேசுகையில், முஷாரப்பே கவனியுங்கள். பொதுத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க வேண்டும் என நாங்கள் உங்களுக்குக் கூறினோம். அதிபர் பதவியிலிருந்து உடனடியாக வெளியேறி விடுங்கள். மரியாதையாக போய் விடுங்கள் என்றோம். ஆனால் நீங்கள் அதற்கு செவி மடுககவில்லை.
கடந்த எட்டரை ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு நீங்கள் இப்போது மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும். அரசியல்வாதிகளை (சுல்பிகர் அலி புட்டோ) மட்டும்தான் தூக்கில் போட வேண்டுமா? (அப்போது கூட்டத்தினர் முஷாரப்பையும் தூக்கில் போட வேண்டும் என்று குரல் எழுப்பினர்).
கடந்த எட்டரை ஆண்டு காலத்தில் நீங்கள் செய்த தவறுக்கு பதவியிலிருந்து வெளியேற்றுவதோடு நிற்க மக்கள் தயாராக இல்லை. அதற்குரிய தண்டனையையும் நீங்கள் அனுபவிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். நீங்கள் பாதுகாப்பாக தப்ப அனுமதிக்க முடியாது என்றார் ஷெரீப்.
நேற்று மாலை முதலே இந்தக் கூட்டம் நடந்தது. ஆனால் ஷெரீப் உள்ளிட்டோர் இன்று காலைதான் பேசினர். இக்கூட்டத்தில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், உச்சநீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் அய்ஸாஸ் அசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications