ஜூன் 21ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு
சென்னை: சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மணி விழா மாநாடு ஜூன் 21-ந்தேதி நடக்கிறது. முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் கே.எம்.காதர் மொகைதீன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1948ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபடுவது, சிறுபான்மை சமுதாய கலாசார தனித்தன்மையை பாதுகாப்பது போன்ற அடிப்படை கொள்கைகளைக் கொண்டுள்ளது இக்கட்சி. கட்சியின் மணிவிழா (60-வது ஆண்டு) மாநில மாநாடு சென்னையில் 21ம் தேதி நடைபெறும்.
காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் மணிவிழா மாநாட்டு மலரை ஜி.எம்.பனாத்வாலா வெளியிடுகிறார். அதனை மத்திய மந்திரி ஆ.ராசா பெற்றுக் கொள்கிறார்.
முஸ்லிம் சமுதாயத்தில் முன்னுதாரணமாக விளங்கிய 60 பேருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருதினை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சமுதாய நல்லிணக்கத்திற்கு பாடுபட்டு வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம். ஸலாஹுத்தீன், வின்சென்ட் சின்னதுரை ஆகியோருக்கு அமைச்சர் அன்பழகன் சமுதாய நல்லிணக்க விருது வழங்குகிறார்.
50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் பணியாற்றி வருபவர்களுக்கு காயிதே மில்லத் விருதினை மத்திய அமைச்சர் இ.அஹமது வழங்குகிறார்.
மகளிரணி சார்பில் சென்னை ராஜாஜி ஹாலில் காலை 10 மணிக்கு கல்வி மேம்பாட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதற்கு கட்சியின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஏ.எஸ்.பாத்திமா முசாபர் தலைமை தாங்குகிறார்.
இதில் கவிஞர் கனிமொழி எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், வக்கீல் அருள்மொழி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 6 பெண்களுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்படுகிறது.
அன்று மாலை சென்னைத் தீவுத் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநில மாநாடு நிறைவு விழா நடைபெறுகிறது. அதையொட்டி மாலை 3.30 மணிக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் இருந்து ஊர்வலம் புறப்படும்.
அதில் 12,000 இளைஞர்கள் வெள்ளை சட்டை பேண்ட் அணிந்து பச்சை தொப்பியுடன் சீருடைப் பேரணியாக தீவுத் திடலுக்கு வருவார்கள்.
அங்கு நடைபெறும் கூட்டத்தி்ல் முதல்வர் கருணாநிதி கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.
இதில் கட்சியின் அகில இந்திய தலைவர் ஜி.எம்.பனாத்வாலா, மத்திய மந்திரி இ.அஹமது, மத்திய மந்திரி ஜி.கே.வாசன், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள் என்றார் காதர் மொகைதீன்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications