தூத்துக்குடியில் ஈராக் போர் கழிவுகள்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரு தனியார் குடோனில் ஈராக் போரில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான ராக்கெட் லாஞ்சர்கள், கன்னிவெடிகள் ஆகியவற்றின் கழிவுகள் கைப்பற்றப்பட்டன.
தூத்துக்குடி எட்டையபுரம் ரோட்டிலுள்ள தனியார் குடோனில் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சன்னி தேவசகாயம் தலைமையிலான போலீசார், சுங்க இலாக அதிகாரிகள், மத்திய உளவுதுறை அதிகாரிகள் ஆகியோர் இன்று சோதனை நடத்தினர்.
இதில் அங்கு துருப்பிடித்த வெடிகுண்டு, ராக்கெட் லாஞ்சர், பசூக்கா ஆகியவற்றின் உறைகளும், பிஸ்டல் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் போன்றவற்றின் காலித் தோட்டாக்களுமாக 300 கிலோ எடையிலான ஆயுதக் கழிவுகள் இருந்தன.
இதனை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், ஆயுதங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் சென்னை நிறுவனம் ஒன்று துபாயிலிருந்து இவற்றை இறக்குமதி செய்திருப்பது தெரிய வந்தது.
சென்னை நிறுவனத்திடமிருந்து தூத்துக்குடி நிறுவனம் ஒன்று இந்த ஆயுதக் கழிவுகளைப் பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இறக்குமதிக்கான ஆவணங்கள் மிகத் தெளிவாக இருந்ததால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
இவை அனைத்தும் ஈராக் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் கழிவுகளாக இருக்ககூடும். இவற்றை துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து இங்குள்ள சிலர் வாங்கியுள்ளனர். ஆனால் இவை அனைத்துமே கழிவுகள் என்பதால் ஆபத்து எதுவும் கிடையாது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications