அடுத்த தேர்தலிலும் காங்கிரசுடன் கூட்டணி-ராமதாஸ்
சென்னை: வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணியில்தான் பாமக நீடிக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக பொதுக்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. நீடிக்கிறது. சோனியா காந்தியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் பா.ம.க. செயல்படும்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் போது அந்த கூட்டணியில் பா.ம.க.வும் இடம்பெறும்.
திருமாவளவன், முதல்வர் கருணாநிதியைசந்தித்தது தொடர்பான முழு விவரங்களும் எனக்கு கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் இதுகுறித்துக் கூறுகிறேன் என்றார்.
முன்னதாக பொதுக்குழுக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், வெகுமக்கள் கட்சியாக பாமகவை நடத்திக் கொண்டிருக்கிறோம். பா.ம.க.வின் பயணம் இனி தொய்வின்றி தொடரும்.
எத்தனை தடை கற்கள் வந்தாலும், அந்த தடைக் கற்களை உடைத்து முன்னேறக்கூடியவர்கள் எங்கள் தொண்டர்கள். எங்களுக்கு என்றும் தோல்வியில்லை. வெற்றி, வெற்றி மேல் வெற்றி தான் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications