சாதாரண பெட்ரோல் விநியோகம் செய்யக் கோரி வழக்கு
சென்னை: பெட்ரோல் நிலையங்களில் சாதாரண வகை பெட்ரோலை பெருமளவில் விற்பனை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனை முற்றிலும்
நிறுத்தப்பட்டு விட்டது.
விலை அதிகமான பவர் மற்றும் பிரீமியம் வகை பெட்ரோல்,டீசலே அதிகம் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக இரு சக்கர வாகனதாரர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அரசு உயர்த்திய விலையை விட கூடுதலாக 5 ரூபாய் வரை கொட்டி அழ வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலையங்களில்கேட்டால் இந்த பெட்ரோல், டீசல்தான் எங்களுக்கு சப்ளை ஆகிறது, இனிமேல் சாதாரண பெட்ரோல், டீசல் என்ற பேச்சுக்கே இடமில்ைல என்று கூறுகிறார்கள்.
சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த வக்கீல் பாலசுப்ரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில்சாதாரண வகை பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. சாதாரண பெட்ரோல், டீசலை, பவர், பிரீமியம் என்ற பெயரில் மோசடியாக விற்கிறார்கள். இதனால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
சாதாரண பெட்ரோலை, பிரீமியம் என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பதால் வாகனம் வைத்திருப்போர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தமிழக பெட்ரோல் பங்குகளுக்கு போதுமான எரிபொருளை எண்ணை நிறுவனங்கள் வழங்குவதில்லை. இதனால்தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி 50 வக்கீல்கள் சேர்ந்து புகார் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்ைல.
மத்திய அரசு மக்கள்நலனைப் பார்க்காமல் லாப நோக்கோடு செயல்படுகிறது. ஆகவே சாதாரண பெட்ரோல், அனைவருக்கும் கிடைக்கும் வகையில்,வழி வகை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பெட்ரோல் டீலர்களுக்கு சாதாரண பெட்ரோலை தாராளமாக வழங்கும்படி எண்ணை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
--
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications