ரயில்களில் 'பயோ-டாய்லெட்': வேலு தகவல்
திருச்சி: ரயில்களில் பயோ டாய்லெட் வசதி செய்யப்படவுள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.
திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரயில்களில் தண்ணீர் மூலம் கழிவுகளை வெளியேற்றும் வகையில் கழிப்பிடங்களை மாற்றி நவீனப்படுத்தும் வகையில், "பயோ- டாய்லெட்' ராஜ்தானி, சதாப்தி உட்பட ஆறு ரயில்களில் அமைக்கப்பட்டு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
அந்த கழிப்பிடங்கள் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எனவே, அனைத்து ரயில் பெட்டிகளிலும், "பயோ-டாய்லெட்' வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த நான்கைந்து ஆண்டில் ரூ.நான்காயிரம் கோடி மதிப்பில், நாட்டிலுள்ள 34 ஆயிரம் ரயில் பெட்டிகளில், "பயோ-டாய்லெட்' அமைக்கப்படும்.
இப்பணிகள் பொன்மலை மத்திய ரயில்வே பணிமனை, ஐ.சி.எப்., உள்ளிட்ட பணிமனைகளில் செய்யப்படும்.அனைத்து ரயில்களிலும் விரைவில், "ஏர் பிரேக்' அமைக்கப்படும்.
இதுவரை நாட்டில் 25 சதவீத வழித்தடம் மின் மயமாக்கப்பட்டுள்ளது. 11வது ஐந்தாண்டு திட்டப்படி நடப்பாண்டில் இரண்டாயிரத்து 500 கி.மீ., பாதை மின்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுரை-தூத்துக்குடி, மணியாச்சி- நாகர்கோவில் இடையே 262 கி.மீ., ரயில்பாதை ரூ.156 கோடி மதிப்பில் மின்மயமாக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம்-திண்டுக்கல் இடையே 272 கி.மீ., ரயில் தடத்தை ரூ.822 கோடி மதிப்பில் இரு வழிப்பாதையாக்கும் திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் துவக்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வேயில் மொத்தம் 10 நாட்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு வைத்திருப்போம். அதனால், எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என்றார் வேலு.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications