புளியங்குடி அருகே திடீர் மறியல்
புளியங்குடி: புளியங்குடி அருகே வேலைக்கு வரச்சொல்லிவிட்டு காணாமல் போன பஞ்சாயத்து அலவலர்களைக் கண்டித்து கூலித் தொழிலாழர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முள்ளிகுளம் பஞ்சாயத்திற்குட்பட்ட துரைசாமியாபுரத்தில் குருக்குளம் மற்றும் முள்ளிகுளம், பேய்குளம் ஆகிய குளங்கள் தூர் வாரும் பணி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடந்து வருகிறது.
காலை முள்ளிகுளம் பேய்குளத்திற்கு ஆண், பெண் தொழிலாளர்கள் சுமார் 300 பேர் வேலைக்கு வந்தனர். ஆனால் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து யாரும் வரவில்லை.
நீண்ட நேரம் ஆகியும் யாரும் வராததால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் புளியங்குடி சங்கரன்கோவில் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பஞ். அலுவலகத்தையும் முற்றுயிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் வந்து தொழிலாளர்களை சமாதானப்படுத்தினர். பஞ். தலைவர் சுந்தரியும் தொழிலாளர்களை அமைதிப்படுத்தினார். இதையடுத்து அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications