திருப்பூரில் பாமக பந்த்: அரசு பஸ் தீவைத்து எரிப்பு - பதட்டம்
திருப்பூர்: நொய்யல் ஆற்றில் சாயக் கழிவு நீர் கலப்பதைத் தடுத்து நிறுத்தக் கோரி பாமக சார்பில் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அங்கு அதிகாலையில் அரசுப் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது. இதைத்தடுத்து நிறுத்தக்கோரியும், பாசன நிலங்களைக் காக்கக் கோரியும், குடிநீர் ஆதாரங்களைக் காக்கக் கோரியும் இன்று ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்த பாமக அழைப்பு விடுத்திருந்தது.
இதையடுத்து திருப்பூரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் வாகனப் போக்குவரத்து பெரிய அளவில் முடங்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் அதிக அளவில் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றுஅதிகாலை 4 மணியளவில் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ் ஒன்று மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
43 ஆண்டுகளுக்குப் பிறகு ..
கடந்த 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதுதான் திருப்பூரில் பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. அதன் பிறகு பல பந்த்துகள், கடையடைப்புகள் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ள போதிலும் பேருந்துகள் எரிக்கப்பட்டதில்ைல.
ஆனால் 43 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டிருப்பதாக திருப்பூர் மக்கள் கூறுகின்றனர்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications