பெரும்பான்மையை நிரூபிப்போம்: சோனியா
டெல்லி: லோக்சபாவில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போம். எங்களது குறிக்கோளை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கு கோருவது குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் சிபு சோரன், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட நான்கு கட்சிகளின் தலைவர்கள் மட்டும் வெவ்வேறு காரணங்களுக்காக கலந்துகொள்ளவில்லை. மற்றஅனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், இதுவரை ஆதரவு அளித்து வந்த இடதுசாரி கட்சிகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அணு சக்தி ஒப்பந்தத்தில் இணைந்து செயல்பட முடியாமல் போனது வருத்தம் தருகிறது.
லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெறும். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களது குறிக்கோளை நிறைவேற்றுவோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தந்துள்ள சமாஜ்வாடி கட்சிக்கும் நன்றிகள் என்றார்.
பின்னர் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ராம் விலாஸ் பாஸ்வான் லண்டனில் உள்ளார். சிபு சோரன் மகனுக்கு கல்யாணம். எனவே இவர்கள் உள்பட நான்கு பேர் மட்டும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்கினார். லாலு பிரசாத் யாதவ், சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது கருத்தைத் தெரிவித்தனர். அனைவரும் இடதுசாரிகளின் கூட்டணியை முறித்துக் கொண்டதை ஆமோதித்தனர்.
இப்போதைய நிலை தர்மசங்கடமானதுதான். இருந்தாலும் இதை சந்திக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல அனைவரும் தயாராக வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இன்று இரவு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது நம்பிக்கை வாக்கு கோரும் தேதி இறுதி செய்யப்பட்டு குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்கப்படும் என்றார் பிரணாப் முகர்ஜி.
'டங் ஸ்லிப்' ஆன பிரணாப்!:
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசத் தொடங்கிய பிரணாப், இன்று காலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது என்று ஆரம்பித்தார். அதைக்கேட்டதும் செய்தியாளர்கள் குழம்பினர்.
சட்டென்று தனது தடுமாற்றத்தை உணர்ந்து கொண்ட பிரணாப்முகர்ஜி, நோ, நோ, தப்பா சொல்லிட்டேன், அதை போட்றாதீங்க. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்தான் நடந்தது என்றார் சிரித்தபடி.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்த்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மஹபூபா முப்தியும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications