நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோற்க வேண்டும்: வெங்கையா நாயுடு
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தோற்க வேண்டும். அதற்காக முழு பலத்தையும் பாஜக பயன்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான்கு ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதுவரை இருந்த அரசுகளிலேயே மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட அரசாகும்.
மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இந்த அரசு ஏமாற்றி விட்டது. அது மட்டுமல்லாமல், தோழமைக் கட்சிகளையும் மதிக்கத் தவறி விட்டது. இதனால் இடதுசாரிகள் தவிர வேறு பல தோழமைக் கட்சிகளும் கூட தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளன.
நல்லாட்சி தர தவறிய இந்த அரசு, கூட்டணி தர்மத்தையும் கூட மீறி விட்டது. நாட்டின் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்களையும், நம்பிக்கையையும் பெற தவறி விட்டது காங்கிரஸ்.
இடதுசாரிகளுடன் எங்களுக்கு கொள்கை ரீதியில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இடதுசாரிகளுக்கு சர்வதேச அணு சக்தி ஒப்பந்த வரைவு நகலை காங்கிரஸ் அரசு காட்டாமல் மறைத்தது மிகப் பெரிய தவறு என்பது பாஜகவின் கருத்தாகும்.
இடதுசாரிகளை என்றில்லாமல், நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், நாட்டு மக்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த விஷயத்தில் இருளில் தள்ளி அவமதித்து விட்டது காங்கிரஸ் அரசு.
அணு சக்தி ஒப்பந்தம் நாட்டு நலனுக்கு உகந்ததாக இருந்தால் நிச்சயம் அதை பாஜக ஆதரித்திருக்கும். இதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் நாட்டு நலனில் சமரசம் செய்து கொள்ள பாஜக தயாராக இல்லை.
அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் என்பதால் இடதுசாரிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கலாம். ஆனால் நாங்கள் அப்படி எதிர்க்கவில்லை. நாட்டு நலனுக்கு இது நல்லதல்ல என்பதால் எதிர்க்கிறோம் என்றார் நாயுடு.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன












Click it and Unblock the Notifications