'நக்கல் சாக்லேட்' தந்த ஏட்டு டிரான்ஸ்பர்
திருச்சி: திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் ஜிபிஎப்-க்கு விண்ணப்பித்திருந்த ஏட்டு கடன் கிடைக்காத விரக்தியில் கமிஷனர் அலுவலகத்தில் அனைவருக்கும் சாக்லெட் கொடுத்தார். இதனால் அவர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி போக்குவரத்து போலீஸ்காரராக இருப்பவர் சந்திரகுமார். தனக்கு ஜிபிஎப் கடன் கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.
மனு கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் அவருக்கு கடன் கிடைக்கவில்லை.ஆனால் அவருக்கு கடன் அளித்துள்ளாக கூறி ஜூலை மாத சம்பளத்தில் காவல் துறை நிர்வாகம் சார்பில் பணம் பிடிக்கப்பட்டிருந்தது.
இதனால் விரக்தி அடைந்த அவர் தனது எதிர்ப்பை சுட்டிக் காட்ட, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போலீசார் மற்றும் ஊழியர்களுக்கு சாக்லெட் வழங்கினார்.
இது குறித்த தகவல் திருச்சி கமிஷனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பேரில் சந்திரகுமாருக்கு உடனடியாக கடன் வழங்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்திரவிட்டார்.
அதேசமயம், சாக்லெட் கொடுத்ததற்காக சந்திரகுமாரை ஆயுதப் படைக்கு மாற்றி விட்டனர்.












Click it and Unblock the Notifications