'குடி'-கண்டித்த தாயை அடித்துக் கொன்ற மகன்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மது குடிப்பதை கண்டித்த தாயை அவரது மகனே அடித்துக் கொன்ற கொடூரம் நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் நாயக்கர் புதுத்தெருவை சேர்ந்தவர் பாண்டி. கூலி தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இவருக்கு குடிப் பழக்கம் இருந்தது. இதனால் மது குடிக்க அடிக்கடி தனது மனைவி அமுதா மற்றும் தாயார் கமலத்தம்மாவிடம் பணம் கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது பூர்வீக சொந்த வீடுகளை மது குடிக்க விற்று செலவு செய்தார். சம்பவத்தன்று தனது மனைவி அமுதாவிடம் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் இல்லை என அமுதா கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டி அமுதாவை கடுமையாக தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த தகவல் அறிந்த பாண்டியின் தாயார் கமலத்தம்மா மகனைக் கண்டித்துள்ளார். ஆத்திரம் அடைந்த பாண்டி சப்பாத்தி கட்டையால் தனது தாயார் கமலத்தாம்மாவை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கமலத்தம்மா பாடியை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவான பாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications