அத்வானி ரொம்ப ஒழுங்கா?-ஆர்.ஜே.டி ஆவேசம்
டெல்லி: குற்றச்சாட்டு பதிவான எம்பிக்கள் அனைவரையும் மக்களவையில் வாக்களிக்க விடாமல் தடை செய்ய வேண்டும் என்றால் அதில் முதல் நபராக அத்வானியைத்தான் சேர்க்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூறியுள்ளது.
மக்களவையில் அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானத்தில் பங்கேற்றுப் பேசிய அக் கட்சியின் எம்.பி. தேவேந்தர் யாதவ் பேசுகையில்,
வழக்குகளில் கைதாகி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட எம்.பிக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள விடாமல் தடை செய்ய வேண்டும் என்று அத்வானி கூறுகிறார். அவர் மட்டும் ஒழுங்கா? அவர் மீது எந்த குற்றப்பத்திரிக்கையும் பதிவு செய்யப்படவில்லையா?.
குற்றச்சாட்டு பதிவான அனைவரையும் தடை செய்ய வேண்டும் என்றால் அதில் முதல் நபராக அத்வானியைத்தான் சேர்க்க வேண்டும். அவர் மீது பல கிரிமினல் வழக்குககள் உள்ளன. எனவே அவரும் குற்றப் பின்னணி கொண்ட உறுப்பினர்களில் ஒருவர்தான்.
மதம் தொடர்பாக இரட்டை நிலையைக் கடைப்பிடிக்கிறது பாஜக. அமர்நாத் யாத்திரை தடைபட்டால் பெரும் குரல் எழுப்பும் பாஜக, அது ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துக்கள் புனிதமாக நினைக்கும் கோவர்த்தன் பர்வத் பகுதியைச் சுற்றிலும் குவாரி மாபியாக்களை வளர்த்து விட்டு வருகிறது.
இந்துக்களின் கடவுளான கிருஷ்ணர், தன்னுடைய விரலால் தூக்கியதாக கருதப்படும் கோவர்தன மலையை இடிக்கும் இந்த மாபியா கும்பலுக்கு ராஜஸ்தான் மாநில பாஜக அரசே துணையாக நிற்கிறது என்றார்.
இதற்கு பாஜக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கும்பலாக எழுந்து நின்று யாதவை பேச விடாமல் கோஷமிட்டனர். பதிலுக்கு ஆர்ஜேடி எம்பிக்களும் ஆவேசமாகக் கத்தினர்.
அப்போது எழுந்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மகாபாரத யுத்தத்துக்கு நாங்கள் தயார். இங்கிருந்தே போரை தொடங்கலாம் என்றார்.
அவர் கூறுகையில், அமர்நாத் விவகாரத்தில் அதிக ஆர்வம் காட்டிவரும் பாஜக சட்ட விரோதமாக கனிம வளங்களை அள்ளுவதற்காக தான் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் கிருஷ்ணரின் நிலத்தை அழிப்பது ஏன்? என்றார்.
இதையடுத்து பாஜக தரப்பு அமைதியானது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications