வறுமை-மின் உற்பத்திக்கு நேரடி தொடர்பு: ராகுல்
டெல்லி: நாட்டின் வறுமைக்கும் மின்சார உற்பத்திக்கும் நேரடியான தொடர்புண்டு என காங்கிரஸ் எம்பியும் சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி கூறினார்.
மக்களவையில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது பேசிய அவர்,
நான் எந்தக் கட்சியின் எம்பியாகவும் பேச விரும்பவில்லை. ஒரு இந்தியனாகவே பேச விரும்புகிறேன்.
என்னைப் போலவே இங்கிருக்கும் அனைத்து எம்பிக்களுக்குமே நாட்டின் நலனை மனதில் வைத்துத் தான் பேசுகிறார்கள் எனக் கருதுகிறேன்.
Energy security-க்கும் (மின்சாரம்) மக்களின் வறுமைக்கும் நேரடியான தொடர்புண்டு. 3 நாட்களுக்கு முன் விதர்பாவில் உள்ள சசிகலா என்ற ஒரு ஏழைப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றேன்.
அந்த வீடு ஒரு நாளைக்கு வெறும் ரூ. 60ல் வயிற்றைக் கழுவி வருகிறது. அந்தப் பெண்ணின் மூத்த மகனுக்கு கலெக்டராக வேண்டும் என்று கனவு, இரண்டாவது மகனுக்கும் படிக்கும் கனவிருக்கிறது.
ஆனால், அவர்களது வீட்டில் விளக்கே இல்லை. அந்தக் குடும்பம் வறுமையிலிருந்து மீள ஒரே வழி அவர்களின் மகன்களுக்கு கல்வி கிடைப்பது தான். அதற்கு ஒரே வழி வீட்டுக்கு மின் விளக்கு கிடைப்பது.
இது போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய ஒரே வழி நம் மின்சார உற்பத்தியை அதிகரிப்பது தான் என்றார்.
இவ்வாறு ராகுல் பேசிக் கொண்டிருந்தபோதே, பகுஜன் சமாஜ் எம்பிக்கள் அவரை கிண்டல் செய்து ரன்னிங் கமெண்ட்ரி செய்து கொண்டிருந்தனர்.
இதனால் ராகுல் பேச்சை நிறுத்த, காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து பகுஜன் சமாஜ் கட்சியினரைக் கண்டித்து குரல் தந்தனர்.
அப்போது சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இடைமறித்து, பகுஜன் எம்பிக்கள் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்றார். அதில் ஒரு எம்பி தொடர்ந்து கூச்சலிடே, உங்கள் பெயரை குறித்து வைக்கப் போகிறேன். அப்புறம் என்ன நடந்தாலும் நீங்கள் தான் பொறுப்பு. உங்களை அதி புத்திசாலியாக கருத வேண்டாம் என்றார்.
ஆனாலும் பகுஜன் சமாஜ் எம்பிக்கள் தொடர்ந்து கூச்சலிட்டபடியே இருந்தனர். சோம்நாத் கடுமையாக கண்டித்த பின்னர் அமைதி திரும்பியது.
இதையடுத்துப் பேசிய ராகுல், அதே விதர்பா பகுதியில் கலாவதி என்ற பெண்.. அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். அவருக்கு 9 குழந்தைகள். இப்போது இரு எருமை மாடுகளை வளர்த்து பால் விற்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்... என்று அவர் பேசிக் கொண்டிருந்தபோதே கூச்சல் அதிகமானதால்,
மதிய உணவு இடைவெளிக்குப் பின் நீங்கள் தொடர்ந்து பேசுங்கள் என்று கூறிவிட்டு அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
அவை ஒத்திவைக்கப்பட்டவுடன் பகுஜன் சமாஜ் எம்பிக்கள் அனைவரும் டெல்லியில் முகாமிட்டுள்ள மாயாவதியை சந்திக்க அவர் இல்லத்துக்கு விரைந்தனர்.
மக்களவையில் பிரியங்கா:
இன்று ராகுல் காந்தி விவாதத்தில் பங்கேற்றுப் பேசியதை அவரது சகோதரி பிரியங்கா காந்தி மக்களவை பார்வையாளர் மாடத்திலிருந்து நேரில் பார்த்தார்.
பிற்பகலில் மீண்டும் அவை கூடியதும்.. மீண்டும் பேச ஆரம்பித்தார் ராகுல். அவர் கூறுகையில், இந்த அணு ஒப்பந்தம் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, கலாவதி போன்றவர்களுக்கும் ஒரு இன்சூரன்ஸ் பாலிஸி போல இருந்து பாதுகாத்து உதவப் போகிறது.
நம் நாட்டின் நீண்டகால மின்சார பற்றாக்குறைக்குத் தீர்வு இந்த ஒப்பந்தம். பிரச்சனையையும் தீர்வையும் முழுமையாகப் புரிந்து வைத்ததால் தான் பிரதமர் இந்த ஒப்பந்தத்துக்கு முன் வந்தார்.
அணு மின் சக்தியால் கிடைக்கப் போகும் பலன்கள் ஏராளமானவை.
சாப்ட்வேர் துறையிலும், தொலைத் தொடர்பிலும் நாம் இன்று மாபெரும் சாதனை படைத்துள்ளோம். இந்தியா இப்படி ஒரு வளர்ச்சியை எட்டும் என 10 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலானவர்கள் நம்பவில்லை. ஆனால், அதை சாதித்துக் காட்டினோம்.
அதே போலத்தான் இந்த அணு மின்சாரமும். நம்புங்கள்.. இது நம் நாட்டை பெரும் வளர்ச்சிக்கு இட்டு்ச் செல்லப் போகிறது.
பெட்ரோலியம் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்களை முழுமையாகச் சார்ந்து நாம் இனியும் காலம் தள்ள முடியாது.
இந்த நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளாலாம்.. ஆனால், எப்படி ஆளப் போகிறோம் என்பது தான் முக்கியம். கண்ணுக்குத் தெரியாத எதற்கோ பயந்து கொண்டு நாம் ஓட முடியாது. பயம் நம்மை இயக்கக் கூடாது.
மக்கள் மீது நம்பிக்கை வைத்து பிரதமர் இந்த ஒப்பந்தத்தை கையில் எடுத்துள்ளார். அவருக்கு துணை நிற்போம் என்றார் ராகுல்.
இந்த தீர்மானத்தின் மீது பேசியவர்களில் ஒரு சிலரில் ராகுலின் பேச்சும் மிகச் சிறந்ததாக அமைந்திருந்தது.
-
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. டென்ஷனான ராகுல் காந்தி.. கூட்டத்தில் எம்பிக்கள் வாக்குவாதம்! -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications