பப்புவிடம் பாஜக ரூ. 7 கோடி பேரம்- லாலு
டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக ஓட்டு போடச் சொல்லி பாஜக மக்களவைத் துணைத் தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா என்னை திகார் சிறையில் வந்து சந்தித்தார் என லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பி பப்பு யாதவ் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ஒருவரை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை பெற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பப்பு.
இந் நிலையில் மக்களவையில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மல்ஹோத்ரா பேசுகையில், ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தண்டனை பெற்று சிறையில் இருக்கும் எம்.பிக்களை கூட காங்கிரஸ் கூட்டணி விட்டு வைக்கவில்லை என்றார்.
அப்போது எழுந்த பப்பு, என்னை இதே மல்ஹோத்ரா சிறையில் வந்து சந்தித்து மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்றார்.
ஆனால், அதை மல்ஹோத்ரா மறுத்தார். நான் பப்பு யாதவை ஒரு போதும் சந்திக்கவில்லை என்றார்.
பின்னர் பப்பு மக்களவைக்கு வெளியே நிருபர்களிடம் பேசுகையில்,
பிகார் மாநிலம் மாதேபுரா தொகுதியில் இருந்து 5 முறை வெற்றி பெற்று இருக்கிறேன். என் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்று பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிக்கு சவால் விடுக்கிறேன். அடுத்தவர் மீது வசைபாடுவதை முதலில் அவர்கள் நிறுத்த வேண்டும் என்றார்.
ராஷ்ட்ரீரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில்,
எங்கள் கட்சி எம்.பி பப்பு யாதவுக்கு பாஜக பணம் கொடுக்க முன் வந்துள்ளது. திகார் சிறையில் அவரை சந்தித்து ரூ.7 கோடி தருவதாக பாஜக தலைவர் கூறியுள்ளார்.
இந்த விவரம் வெளியில் வந்தவுடன் அதை மறைக்க மக்களவையில் 1 கோடி ரூபாயைக் கொட்டி பாஜக நாடகம் நடத்தி தப்பிக்க முயல்கிறது என்றார்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications