2 ஐக்கிய ஜனதா தள எம்பிக்கள் நீக்கம்
டெல்லி: மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 2 எம்பிக்கள் இன்று நீக்கப்பட்டனர்.
கடந்த 22ம் தேதி மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இதில் எதிர்கட்சி எம்பிக்கள் பலர் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். இதையடுத்து பிரதான எதிர்கட்சியான பாஜக, தனது 8 எம்பிக்களை கட்சியிலிருந்து நீக்கியது. கட்சி மாறி ஒட்டுபோட்ட எம்பிக்களை 'கிளப்பும்' வேலையில் எதிர்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
அந்த வரிசையில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் ஐக்கிய கட்சியிலும் 2 எம்பிக்கள் நீக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் நாலந்தாவைச் சேர்ந்த எம்பி ராம் ஸ்வரூப் பிரசாத் அரசுக்கு ஆதரவாக ஓட்டுபோட்டார். மற்றொருவரான லட்சத்தீவைச் சேர்ந்த எம்பி, பி.பி.கோயா வாக்களிக்காமல் இருந்துவிட்டார்.
இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் சரத்யாதவ் தலைமையில் தேசிய நிர்வாகிகளின் அவசர கூட்டம் நடந்தது. பின்னர் கட்சி பொதுச் செயலாளர் ஜாவீத் ரசா கூறுகையில், கட்சி கொறடாவின் உத்தரவை மீறி எம்பிக்கள் ராம் ஸ்வரூப் பிரசாத் மற்றும் பி.பி.கோயா ஆகியோர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதனால் இருவரும் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகின்றனர். சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யும்படி சோம்நாத் சட்டர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கட்சி உத்தரவிட்டது. இதுகுறி்த்து வரும் 28ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்யும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications