விபச்சாரம்-பெண்களுடன் பிடிபடும் ஆண்களுக்கும் இனி தண்டனை!
டெல்லி: விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்கள் மட்டும் தண்டனைக்குள்ளாகும் நிலையை மாற்றி, விபச்சாரப் பெண்களுடன் பிடிபடும் ஆண்களுக்கும் அபராதம், சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
விபச்சார வழக்குகளில் தற்போது பெண்களுக்கு மட்டுமே அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. ஆண்களுக்கு இதில் எந்தவித தண்டனையும் கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையை மாற்றி பெண்களைப் போல ஆண்களையும் தண்டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என மகளிர் அமைப்புகள் கோரி வந்தன. இதையடுத்து விபச்சாரத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, விபச்சார பெண்களிடம் போகும் ஆண்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படும்; மறுமுறையும் அவர்கள் சிக்கினால், அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
இதுதொடர்பான சட்ட மசோாத 2006ம் ஆண்டு, மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
விபசாரத்தில் பெண்கள் மட்டுமின்றி, அவர்களிடம் வரும் ஆண் வாடிக்கையாளர்களுக்கும் தண்டனை உண்டு என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மசோதா குறித்து, அமைச்சர்கள் குழு பரிசீலித்து பரிந்துரை செய்ய அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த அமைச்சர்கள் குழு, சமீபத்தில் இதற்கு ஒப்புதல் தெரிவித்து பச்சைக்கொடி காட்டி விட்டது.
விரைவில் இந்த மசோதா, அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு, அங்கும் அங்கீகாரம் பெறப்படும். அதன் பின், மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications