உண்மையான திமுக: எதிர்காலம் தீர்மானிக்கும்-வைகோ
தூத்துக்குடி: உண்மையான திமுக எது என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
தூத்துக்குடியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர்,
நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்பிக்களுக்கு பல கோடி ரூபாய் பணம் கொடுத்து மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி இழிவானது.
டெல்லி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் தேர்தல் வர உள்ளது. அந்த தேர்லின் போதே மத்தியிலும் தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அந்த தேர்தலில் மக்கள் கங்கிரசுக்கு மரண அடி கொடுப்பார்கள்.
தமிழ மீனவர்கள் இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வதற்கு மன்மோகன் சிங் அரசும், அதில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகத்திலும் விரைவில் தேர்தல் வரப்போகிறது. அப்போது கடலோர கிராமங்களில் சில கட்சிகள் கால் கூட வைக்க முடியாது என்பதை உணர்ந்து இலங்கை ராணுவத்தை கண்டித்து உண்ணாவிரதம் என்ற நாடகத்தை திமுக அரங்கேற்றியுள்ளது.
விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர மணல் கொள்ளை, உரத் தட்டுப்பாடு போன்றவைகளும் சேர்த்து மக்களை மோசமாயாக பாதித்துள்ளது.
உண்மையான மதிமுக எது என்று தேர்தல் கமிஷன் தீர்மானித்துள்ளது. அதே போல் உண்மையான திமுக எது என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, மதிமுக கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றார் வைகோ.


Click it and Unblock the Notifications
