நக்சல்கள்-சென்னையில் தென் மாநில டிஜிபிக்கள் மாநாடு
சென்னை: நக்சலைட்டுகளை ஒடுக்குவது தொடர்பான கூட்டு நடவடிக்கை குறித்து முடிவு செய்வது தொடர்பாக சென்னையில் இன்று தென் மாநில டிஜிபிக்கள் மாநாடு நடைபெற்றது.
தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கர்நாடக ஆகிய மாநிலங்களின் காவல்துறை தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் டிஜிபி ஜெயின், ஆந்திர டிஜிபி எஸ்.எஸ்.பி.யாதவ், புதுச்சேரி ஐஜி ஏ.எஸ்.கான், கேரள மாநில டிஜிபி ராமன் ஸ்ரீவத்சவா, கர்நாடக மாநில டிஜிபி ஆர்.ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக கூடுதல் டிஜிபிக்கள் அர்ச்சனா ராமசுந்தரம், விஜயகுமார், லத்திகா சரண், சென்னை போலீஸ் கமிஷனர் சேகர், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், மேற்கு மண்டல ஐஜி சஞ்சய் அரோரா, வடக்கு மண்டல ஐஜி ராதாகிருஷ்ணன், ஆந்திர ஐஜி உமாபதி, கேரள ஐஜி லோக்நாத், கர்நாடக டிஐஜி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபீசர்ஸ் மெஸ் வளாகத்தில் நடந்த இந்த மாநாட்டில், தென் மாநிலங்களில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்துவது குறித்தும், கடல் வழியாகவும் மாநிலங்களின் பிற பகுதிகள் மூலமாகவும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அடியோடு தடுக்கவும், அவர்களின் செயல்பாட்டை ஒடுக்கவும் மேற்கொள்ள வேண்டிய தீவிர நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
மேலும் மாநிலங்களுக்கு இடையே உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கைகள் மேற் கொள்வது பற்றியும் சைபர் கிரைம் குற்றங்களை ஒடுக்குவதில் மாநில காவல் துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், அண்டை மாநிலங்களுக்கு தப்பி ஓடினால் அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட, அந்தந்த மாநில காவல் துறைகள் ஒத்துழைப்பை அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications