வன்னிய சமூக போலீஸார் இடமாற்றம்-தடை
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 போலீஸார் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இடமாற்றல் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 போலீசாரை இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டிருந்தார். இவர்கள் வன்னியர் சமூகத்தைச் ேசர்ந்தவர்கள் என்பதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து டிஜிபி ஜெயினிடமும் அவர் புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், எஸ்.பியின் உத்தரவை எதிர்த்து அறிவழகன், அன்பழகன், செல்வக்குமார் உள்பட எட்டு போலீசார் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் அவர்கள், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டபிறகு எங்களுக்கு இந்த இடமாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழி வாங்கும் நோக்கத்துடன் இந்த இடமாற்றல் உத்தரவை அரியலூர் மாவட்ட எஸ்.பி.பிறப்பித்துள்ளார். எனவே, இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த இடமாற்றல் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், 4 வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய அரியலூர் மாவட்ட எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications