தீ விபத்திலிருந்து காத்த முயல்!
மெல்போர்ன்: வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது உரிமையாளரை உஷார்படுத்தி பெரும் விபத்திலிருந்து அவரையும், அவரது மனைவியையும் காத்துள்ளது ஒரு முயல்.
மெல்போர்ன் நகரில்தான் இந்த அரிய சம்பவம் நடந்துள்ளது.
அந்த முயல் இருந்த வீட்டில் நள்ளிரவில் பின்பக்க அறையிலிருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த முயல், வீட்டு உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்த படுக்கை அறையின் கதவை சுரண்டியுள்ளது.
சத்தம் கேட்டு எழுந்த உரிமையாளர் என்னவென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க அறையிலிருந்து புகை வருவதை அறிந்து உடனடியாக தீயணைப்புப் படைக்குத் தகவல் கொடுத்தார்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அந்த அறை பெரும் சேதத்தை சந்தித்தது. முயல் மட்டும் உஷார்படுத்தி கதவை சுரண்டியிருக்காவிட்டால் வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் நிச்சயம் படுகாயமடைந்திருப்பார்கள் என தீயணைப்பு படை அதிகாரி மைக் ஸ்விப்ட் தெரிவித்தார்.
புத்திசாலித்தனமாக செயல்பட்ட அந்த முயலை வீட்டு உரிமையாளர் பாராட்டி கையில் தூக்கி தோளில் வைத்து அணைத்துக் கொண்டார். இந்த சம்பவம் மெல்போர்னில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications