மெயில் அனுப்பிய அமெரிக்கர் குறித்து தெரியாது: யுஎஸ்
வாஷிங்டன்: இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் மிரட்டல் இ மெயில் அனுப்பிய அமெரிக்கர் குறித்து எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அகமதாபாத் குண்டுவெடிப்புக்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு டிவி நிறுவனங்களுக்கு ஒரு மெயில் வந்தது. அதில் இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு இந்த குண்டுவெடிப்புக்கு தாங்களே காரணம் என்று கூறியிருந்தது.
இந்த இ மெயில், நவி மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டிலிருந்து வந்ததது. அந்த வீட்டை, அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் வாடகைக்கு எடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் கோன்சாலோ கல்லேகஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்களும் அந்த செய்தியைப் படித்தோம். இருப்பினும் அதை உறுதி செய்ய எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை.
இந்த குண்டுவெடிப்பு மிகவும் கொடூரமானது, கடும் கண்டனத்துக்குரியது. இதை ஏற்கவே முடியாது. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்றார் கல்லேகஸ்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications