அரசியலுக்கு முழுக்குப் போட சோம்நாத் சாட்டர்ஜி முடிவு
கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் வேதனையில் மூழ்கியுள்ள லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அரசியலுக்கு முழுக்குப் போட முடிவு செய்துள்ளதாக அவரது நண்பரும், சோம்நாத்துக்கு முன்பாகவே சிபிஎம்மிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டவரும், ஜனநாயக சமத்துவ கட்சியின் தலைவருமான சைபுதின் செளத்ரி கூறியுள்ளார்.
2000மாவது ஆண்டு, காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமான நட்பு வைத்திருந்ததற்காக முன்பு சோம்நாத் சாட்டர்ஜியும், செளத்ரியும் கட்சி பொலிட்பீரோவால் கண்டிக்கப்பட்டனர். அப்போது சோம்நாத்துக்கு ஜோதிபாசுவின் ஆதரவு இருந்ததால் அவர் மீது பெரிய அளவில் நடவடிக்ைக எடுக்கப்படவில்லை. ஆனால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார் செளத்ரி. அதன்பின்னர் ஜனநாயக சமத்துவ கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார்.
தற்போது சோம்நாத் சாட்டர்ஜியும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கொல்கத்தா வந்த அவர் செளத்ரியை சந்தித்து மனம் விட்டுப் பேசினார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் சோம்நாத் கொல்கத்தா வருவது இதுவே முதல் முறையாகும்.
சோம்நாத்துடனான சந்திப்பு குறித்து செளத்ரி கூறுகையில், கட்சியில் இருந்து நீக்கியதால் சோம்நாத் சட்டர்ஜி மிகுந்த அதிருப்தியிலும் மனவேதனையிலும் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.
அவர் கடும் கோபமாகவும் இருக்கிறார். அவர் மன உளைச்சலில் இருப்பதை நானும் தெரிந்து கொண்டேன். மேலும், தான் அரசியலில் இருந்து விலக முடிவு எடுத்து இருப்பதாகவும், அதன்பின் சமூக சேவையில் ஈடுபடப் போவதாகவும் என்னிடம் கூறினார்.
அவரிடம் நீங்கள் எந்த அரசியல் விளையாட்டிலும் ஈடுபடவில்லை. நாட்டின் நலனுக்காகத்தான் செயல்பட்டிருக்கிறீர்கள். இந்த நிலையில், நீங்கள் சபாநாயகர் பதவியில் இருந்து விலகி விட வேண்டாம் என நான் கேட்டுக் கொண்டேன்.
தான் எப்போது பதவியில் இருந்து விலகுவேன் என்பது குறித்தோ, அல்லது தனது நீக்கத்தை ரத்து செய்யும்படி கட்சியிடம் கேட்டுக் கொள்வது பற்றியோ அவர் எதுவும் என்னிடம் கூறவில்லை என்றார் அவர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications