தூத்துக்குடி மாநகராட்சி-கருணாநிதி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி: தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தூத்துக்குடி இன்று உதயமானது. முதல்வர் கருணாநிதி மாநகராட்சியைத் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு மாநகராட்சி வரிசையில் கடந்த ஒன்றாம் தேதி வேலூரும் இணைந்தது.
இதையடுத்து தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தூத்துக்குடி இன்று உதயமானது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு விழா நடந்தது. அமைச்சர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
முதல்வர் கருணாநிதி மாநாகராட்சியைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் உரை நிகழ்த்தினார்.
முன்னதாக சட்டசபையில் மானியக் கோரிக்கையின்போது பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின். அனல்மின் நிலையம் மற்றும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகளை கொண்ட தொழில் நகரான தூத்துக்குடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி தூத்துக்குடி நகராட்சியோடு 10 கிராம ஊராட்சிகள் சேர்க்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் உள்பட பல முக்கிய பணிகளை மேம்படுத்த ரூ.16.49 கோடி கோரப்பட்டது. இதை பரிசீலித்த அரசு ரூ.5 கோடியை மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது. மீதி தொகையை மாநகராட்சியின், பொது நிதியிலிருந்து எடுத்து செலவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications