முதல்வர்-கனிமொழி குறித்து அவதூறு: சிக்கலில் எஸ்.எஸ்.சந்திரன்
செங்கோட்டை: தமிழக முதல்வர் கருணாநிதி, அவரது மகள் கனிமொழி ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் கடந்த 6ம் தேதி அதிமுக சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பொது கூட்டம் நடைபெற்றது.
அதில் முன்னாள் எம்பியும், நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் கருணாநிதி கொடுக்கும் இலவச தொலைக்காட்சி பெட்டிகள் எல்லாம் தினந்தோறும் குண்டுகளாக வெடிக்கின்றன என்றார்.
மேலும் திமுக எம்பி கனிமொழி குறித்தும் அவதூராக பேசினார்.
இதுகுறித்து மாநில திமுக பேச்சாளர் சாட்டையடி சக்திவேல் என்பவர் செங்கோட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.சந்திரன் மீது புகார் கொடுத்துள்ளார்.
அதில், மக்கள் மத்தியில் அச்சத்தையும், பயங்கரவாதத்தையும் தூண்டும் விதமாகவும், மக்களிடம் தவறான கருத்தை பரப்புகின்ற அளவு அவரது பேச்சு அமைந்துள்ளது. எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேபோல் வேறு இரு திமுகவினர், கனிமொழி எம்பியை தகாத வார்த்தைகள் பேசியதாக எஸ்.எஸ்.சந்திரன் மீது இதே காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications