குமரியில் முதன்முறையாக ரேசன்கார்டு கோரி அரவாணி மனு
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் முதன்முறையாக ரேசன் கார்டு கோரி கலெக்டரிடம் அரவாணி மனு கொடுத்துள்ளார்.
குமரி மாவட்டம் வாணியக்குடியை சேர்ந்தவர் ஆன்றோ வில்சன். இவர் திருநங்கையான (அரவாணி) பின் தனது பெயரை ஸ்டெல்லா என மாற்றிக் கொண்டார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன் பெங்களூரை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபரை சொந்த ஊரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தினேஷ்குமார் சிங்கபூரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையி்ல் அவருடன் ஸ்டெல்லாவும் சிங்கப்பூர் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்க வசதியாக ரேசன் கார்டு வழங்குமாறு கலெக்டர் ஜோதி நிர்மலாவை நேரில் சந்தித்து அவர் மனு கொடுத்தார். அந்த மனுவில்,
நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மும்பை சென்றேன். பின்னர் பெங்களூருக்கு வந்து அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி எனது பெயரை ஸ்டெல்லா என்று மாற்றிக் கொண்டேன். எனக்கு தற்போது 28 வயதாகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபரை காதலித்து வீட்டில் உள்ள அனைவரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன்.
தற்போது எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நானும் அவருடன் வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. பாஸ்போர்ட் எடுக்க ரேசன் கார்டு தேவைப்படுவதால் எனக்கு அரவாணிகள் நலவாரியத்தின் கீழ் ரேசன் கார்டு பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications