கூட்டணிக்கு கட்சிகளை இழுக்க பாஜக தீவிரம்!

தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்குப் பின்போ கூட்டணி சேராலம் என இந்தக் கட்சிகளிடம் பாஜக தலைவர்கள் கூறி இழுக்க முயற்சித்து வருகின்றனராம்.
இந்த முயற்சியின் முதல் கட்டமாக தற்போது 3வது அணியில் உள்ள அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளத்தை பாஜக குறி வைத்துள்ளது. அஜீத் சிங்குடன் பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி ஒரு மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
அஜீத் சிங் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் பக்கம் சாய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் முயற்சியால் 3வது அணி பக்கம் சாய்ந்ததால் கட்சியினர்அதிருப்தியில் ஆழ்ந்தனர். இதைப் பயன்படுத்தி அவரது கட்சியை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயலுகிறது.
ஏற்கனவே பாஜக கூட்டணியில்தான் அஜீத் சிங் முன்பு இருந்தார். இடையில் பிரிந்து போயிருந்தார். தற்போது மீண்டும் அவரை இழுக்கும் முயற்சியை பாஜக தொடங்கியுள்ளது.
உ.பியில் விவசாயிகளிடம் அஜீத் சிங்குக்கு செல்வாக்கு உள்ளது. தற்போது காங்கிரஸும், சமாஜ்வாடியும் உ.பியில் கை கோர்த்துள்ள நிலையில், மறுபக்கம் மாயாவதி மிரட்டி வருகிறார். இதனால் எப்படி கரையைக் கடப்பது என தெரியாமல் திகைத்து நிற்கும் பாஜக, அஜீத் சிங்கை பயன்படுத்தி இந்த சவால்களை சமாளிக்க தீர்மானித்துள்ளது.
அதிமுகவையும் இழுக்க முயற்சி ..
இதேபோல தமிழகத்தில் அதிமுக, அஸ்ஸாமில் அஸ்ஸாம் கன பரிஷத், ஹரியாணாவில் இந்திய தேசிய லோக் தளம் (இவர் தற்போது 3வது அணியில் இருக்கிறார்) ஆகிய கட்சிகளையும் இழுக்கவும் நடவடிக்கைகளை பாஜக எடுத்துள்ளது.
இந்தப் பணிகளில் மூத்த தலைவர்களான ஜஸ்வந்த் சிங், வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சில கட்சிகளை தேர்தலுக்கு முன்பு கூட்டணியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ள பாஜக, தேர்தலுக்குப் பின்னர் சில கட்சிகளை இணைக்கவும் திட்டமிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக 350 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளது. மற்ற தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கும் ஐடியா உள்ளது. மொத்தத்தில் 290 தொகுதிகளைப் பிடிக்க வேண்டும் (தனியாகவோ அல்லது கூட்டணி சேர்த்தோ) என்பதே பாஜகவின் முக்கிய நோக்கமாக உள்ளது.
அதேசமயம், கட்சியின் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளதாக முன்பு கூறிய பாஜக தற்போது அதை நிறுத்தி வைத்துள்ளதாம். சமீபத்தில் நடந்த நம்பிக்ைக வாக்கெடுப்பின்போது சில எம்.பிக்கள் பால் மாறியதால், வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டாம் என கட்சி மேலிடம் கருதுகிறதாம். மேலும் கூட்டணியை இறுதி செய்து கொண்ட பின்னர் இதுகுறித்து முடிவெடுக்கவும் அது திட்டமிட்டுள்ளது.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், பிஜூ ஜனதாதளம், சிவசேனா, சுதந்திர பாரத கட்சி ஆகியவை மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications