மது கோடா அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றார் சோரன்
{image-Madhu Koda250_18082008.jpg tamil.oneindia.com}ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி திரும்பப் பெற்றது. இதனால் மது கோடா தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. அதற்குப் பிரதியுபகாரமாக மத்திய அமைச்சர் பதவியை கோரினார் அக்கட்சியின் தலைவர் சிபுசோரன். இந்த நிலையில் தற்போது திடீரென ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவி வேண்டும் என நெருக்க ஆரம்பித்தார் சோரன்.
ஆனால் தற்போது ஜார்க்கண்ட் முதல்வராக உள்ள காங்கிரஸ் கட்சியின் மது கோடா பதவி விலக முடியாது என கூறி வருகிறார். இதுதொடர்பாக காங்கிரஸ் விடுத்த கோரிக்கையையும் அவர் நிராகரித்து விட்டார்.
கோடா விலகாவிட்டால் ஆட்சியைக் கவிழ்ப்பேன் என சோரன் மிரட்டல் விடுத்தார். இந்த சூழ்நிலையில், நேற்று ஆளுநரை சந்திக்க சிபு சோரன் முடிவு செய்தார். ஆதரவை திரும்பப் பெறவும் தீர்மானித்தார். இதுதொடர்பாக கட்சி எம்.எல்.ஏக்களுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு ஆளுநர் சையத் சிப்தே ரஸியை சிபு சோரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். ஆளுநரிடம் கோடா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை சோரன் வழங்கினார்.
மேலும், கோடா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சோரன் கட்சியைச் ேசர்ந்த அமைச்சர்கள் மஹதோ, நளின் சோரன், துலால் புயான் ஆகியோரும் தங்களது ராஜினாமா கடிதங்களை ஆளுநரிடம் வழங்கினர்.
பின்னர் கட்சியின் மூத்த தலைவர் திலீப் சாட்டர்ஜி கூறுகையில், நாங்கள் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம். சிபு சோரன் முதல்வராவார் என்றார்.
அதேசமயம், தனது அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று மது கோடா கூறியுள்ளார். சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
கட்சிகளின் பலம்:
சுயேச்சை எம்.எல்.ஏ.வான மது கோடா தலைமையிலான ஜார்க்கண்ட் அரசுக்கு, காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகியவை ஆதரவு அலித்து வருகின்றன. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்குத்தான் அதிக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மொத்தம் 17 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கோடா அரசுக்கு மொத்தம் 43 எம்.எல்.ஏக்களின் ஆதரவு முன்பு இருந்தது.
காங்கிரஸ் 7, ராஷ்டிரிய ஜனதாதளம் 9, யுஜிடிபி 2, தேசியவாத காங்கிரஸ் 1 மற்றும் சில சுயேச்சைகள் இதில் அடங்குவர்.
சுயேச்சைகளில் 5 பேர் மது கோடா அரசுக்கு ஆதரவாக உள்ளனர். இவர்களில் ஸ்டீபன் மராண்டி துணை முதல்வராக உள்ளார். இவர்கள் ஐந்து பேர் மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகர் ஆலம்கீர் ஆலமிடம் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்திலும் பொது நலன் வழக்கு போடப்பட்டுள்ளது.
சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் மாநில இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ள பந்து திர்கே மட்டுமே சிபு சோரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications