மர்ம நபர்கள் நடமாட்டம்: 10 கிராமங்களில் போலீசார் அதிரடி சோதனை
தூத்துக்குடி: வெளிமாநிலங்களைச் சேர்ந்த மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 10 கிராமங்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. வெளிமாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் இங்கு தங்கியிருந்து இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்று விசாரனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி மாவட்ட எஸ்பி தீபக் டமோர் உத்தரவின்படி தூத்துக்குடியை சுற்றி உள்ள கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் சீருடை அணியாமல் சாதாரண உடையில் சோதனையில் இறங்கினர்.
குலையன் கரிசல், திரவியபுரம், சேர்வைகாரன்மடம், கூட்டாம்புளி, தங்கம்மாள்புரம், ஜக்கம்மாள்புரம், தேரி, புதுக்கோட்டை, சாயர்புரம் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
அப்போது அங்குள்ள காட்டு பகுதியில் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் மற்றும் சந்தேகப்படும்படியாக யாராவது பதுங்கி இருக்கிறார்களா என்று தேடினார்கள். அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடமும் சந்தேகப்படும்படியானவர்கள் மற்றும் வெளி மாவட்டதைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரனை நடத்தினர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications