சிரஞ்சீவிக்கு அத்வானி வாழ்த்து!: கூட்டணி?
ஹைதராபாத்: புதிதாக அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் சிரஞ்சீவிக்கு பாஜக தலைவர் அத்வானி வாழத்துத் தெரிவித்துள்ளார். அவருடன் கூட்டணிக்கும் பாஜக முயலும் எனத் தெரிகிறது.
ஆந்திர சினிமாவின் சூப்பர் ஸ்டார் சீரஞ்சீவி புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளார். கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை வரும் 26ம் தேதி அறிவிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாஜக தலைவர் அத்வானி, தொலைபேசி மூலம் சிரஞ்சீவிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இருவரும் தொலை நேற்று தொலைபேசியில் பேசினர். அப்போது கூட்டணி அமைப்பது குறித்தும் அத்வானி பேசியதாக ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை மத்தியில் பாஜக ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்தவர் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு. அவருக்கு அத்வானியிடம் பெரும் செல்வாக்கு இருந்தது.
தான் துணை பிரதமராவது குறித்து பிற கட்சிகளுடன் விவாதிக்காத அத்வானி, நாயுடுவிடம் மட்டுமே அது குறித்துப் பேசினார்.
ஆனால், இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்துடன் தேர்தலை சந்தித்த பாஜகவும் நாயுடுவும் படு தோல்வி அடைந்தனர். மதவாத கட்சியுடன் கூட்டு சேர்ந்ததால்தான் தோல்வி ஏற்பட்டதாகக் கூறி பாஜகவை விட்டு சந்திரபாபு நாயுடு விலகினார்.
இந் நிலையில் ஆந்திராவில் சிரஞ்சீவியுடன் கூட்டணிக்கு அஸ்திராவரம் போட ஆரம்பித்துள்ளார் அத்வானி.
ஆந்திராவில் கணிசமான மக்கள் தொகையை கொண்ட காபு இனத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications