ஆர்.சி.வி. மீது வழக்கு-சன் டிவி கோரிக்கை நிராகரிப்பு
சென்னை: மு.க.அழகிரியின் ராயல் கேபிள் விஷன் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சன் டிவி நிறுவனம் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி ஆரம்பித்துள்ள ராயல் கேபிள் விஷனுக்கும், (ஆர்.சி.வி) சன் டிவி நிறுவனத்திற்கும் மதுரையில் மோதல் மூண்டுள்ளது. சன் குழும சானல்களை ஆர்.சி.விக்குத் தர வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் அதை சன் டிவி நிராகரித்து விட்டது. இதனால் மதுரையில் சன் டிவி சானல்கள் பல நாட்களாக தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆர்.சி.வி. மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சன் டிவிசார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், எங்களது சேனல் சிக்னல்களை சட்டவிரோதமாக திருடி வருகிறது ஆர்.சி.வி. இதுகுறித்து பல்வேறு காவல் நிலையங்களில் பலமுறை புகார்கள் கொடுத்தும் போலீஸார் புகார்களை ஏற்று வழக்குப் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர்.
எனவே ஆர்.சி.வி. நிறுவனம் மீது புகார் பதிவு செய்து நடவடிக்ைக எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், அரசியல் சட்டத்தின் 226வது பிரிவின் கீழ் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட நீதிமன்றத்தால் முடியாது.
இருப்பினும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மனுதாரர், உள்ளூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை அணுகி புகார் பதிவு செய்ய முடியும் என்று கூறி சன் டிவியின் கோரிக்கையை நிராகரித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications