தமிழக டீசல் தட்டுப்பாடு-சரத்குமார் சந்தேகம்
சென்னை: தமிழகத்தில் டீசல் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே உருவாக்கி விற்பனையை குறைக்கிறார்களோ என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மற்றும் புறநகரங்களில் திடீரென டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட டீசல் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தட்டுப்பாட்டால் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலைமை ஏற்பட்டது.
அப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் நமக்கு வர வேண்டிய டேங்கர்கள் வர தாமதமானதாலும் அந்த நிலை ஏற்பட்டதாக, அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அந்த நிலைமை சரியான ஒரு மாதத்திற்குள் மறுபடியும் சென்னையிலும் புறநகரங்களிலும் கடும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், தங்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை தாமதப்படுத்தி அனுப்புவதாக கூறுகின்றனர்.
முதன்முறை டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டபோது வேண்டுமென்றே இதுபோன்ற தட்டுப்பாட்டை உருவாக்கி விற்பனையை குறைக்கிறார்களோ என்ற சந்தேகத்தை உருவாக்கியது. மறுபடியும் அதே சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.
ஒருபுறம் டீசல், பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை, அரசே மானியமாக பெட்ரோலிய கம்பெனிகளுக்கு வழங்குகிறது என்னும் தோற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டு, மறுபுறம் டீசல் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி, நஷ்டத்தை தவிர்க்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பெட்ரோலியப் பொருட்களைப் பொறுத்தவரை இது மத்திய அரசின் கீழ் வரும் நடவடிக்கை என்று சும்மா இருக்க முடியாது. மாநில அரசின் கீழ் வரும் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலமாக, வழங்கப்பட்டிருக்கும் பெட்ரோலிய பொருட்களுக்கான லைசன்சை கண்காணித்து தட்டுப்பாடின்றி டீசல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மின்சார தடையை சரி செய்ய முடியாத மாநில அரசு, மின்சாரத் தட்டுப்பாடு இருக்கும்போது டீசல் ஜெனரேட்டர்களைத் தான் பெரும்பாலான சிறு, குறு தொழிற்சாலைகளும், விவசாயிகளும் நம்பி இருக்கின்றனர் என்ற உண்மையை உணர வேண்டும்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications