சுரேஷ் ராஜனை நீக்கக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: சிறப்பு துணை கலெக்டரை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டிய சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜனை நீக்கக் கோரி நாகர்கோவிலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த இலவச டிவி அளிப்பு விழாவின்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் ேசர்ந்த சிறப்பு துணை கலெக்டர் ஜனார்த்தனை, ஜாதிப் பெயரைச் சொல்லி அமைச்சர் சுரேஷ் ராஜன் திட்டியுள்ளார். கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஜனார்த்தன், அமைச்சர் சுரேஷ் ராஜன் மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
3 மாதங்கள் கழித்து, ஜனார்த்தனுக்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் அமைச்சர் உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்குப் பொறுப்பேற்று அமைச்சர் சுரேஷ் ராஜன் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை முதல்வர் கருணாநிதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று நான் கோரியிருந்தேன். ஆனால் அந்தக் கோரிக்கையை முதல்வர் நிராகரித்து விட்டார். இந்தப் பின்னணியில் அமைச்சர் சுரேஷ்ராஜனை டிஸ்மிஸ் செய்யக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையில், மாவட்ட செயலாளர் பிச்சம்மாள் முன்னிலையில், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும்.
இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இதையடுத்து அதிமுக மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகியது. அங்கு, போலீஸார் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதிமுகவின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications