வங்கியில் ரூ.1.5 லட்சம் கையாடல்-ஊழியர் கைது
சென்னை: தனியார் வங்கியில் கிளர்க் ஆக பணியாற்றி வந்த ஊழியர், ரூ. 1.5 லட்சம் வங்கிப் பணத்தை கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்த தனியார் வங்கி நிர்வாகம், அண்ணா சாலை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தது. அதில் தங்களது வங்கியில் பணியாற்றி வரும் ஊழியர் ஆறுமுகம், வங்கிப் பணத்திலிருந்து ரூ. 1.5லட்சத்தை கையாடல் செய்து விட்டார்.
கடந்த 19ம் தேதி புதுச்சேரியிலிருந்து, மதுராந்தகம் வழியாக ரூ. 1.14 கோடி வசூல் பணம் கொண்டு வரப்பட்டது.
இந்தப் பணத்தை ஷிப்ட் முறையில் வங்கி அதிகாரிகள் எண்ணினர். பின்னர் இப்பணத்தை ஆகஸ்ட் 20ம் தேதி கணக்கிட்டபோது, ரூ. 1.5 லட்சம் குறைந்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கோரப்பட்டிருந்தது.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், ஊழியர் ஆறுமுகம்தான் பணத்தைக் கையாடல் செய்தததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரைக் கைது செய்து கையாடல் செய்த பணத்தையும் கைப்பற்றினர்.
கடந்த பத்து ஆண்டுகளாக இந்த வங்கியில் பியூன் ஆகப் பணியாற்றினார் ஆறுமுகம். பின்னர் கிளர்க் ஆக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications