அதிமுகவுடன் கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் தயார்
திண்டுக்கல்: திமுக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெறவில்லை என்று அக்கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார். அதே சமயம், அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தயார் என்றும் சூசகமாக அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் வரதராஜன் கூறியதாவது:
முதல்வர் கருணாநிதியின் வயது, அரசியல் அனுபவம், கலைத்துறையில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு ஆகியவற்றை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம், அரசியல் நிலையில் மாறுபாடு ஏற்படும்போது அதை ஜனநாயக ரீதியில் பார்க்கிறோம், விமர்சிக்கிறோம்.
தனிப்பட்ட முறையில் திமுகவுடனோ, அதன் தலைவர்களுடனோ விரோதம் எதுவும் இல்லை. அரசியல் நிலைப்பாட்டால் மட்டுமே நாங்கள் வேறுபட்டு இருக்கிறோம். முதல்வர் கருணாநிதி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன்.
ஒருமுறை லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளை திமுகவிடம் கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை. அதையடுத்து வடசென்னை மற்றும் மதுரை ஆகிய தொகுதிகளில் தனித்து போட்டியிட்டோம். மற்ற தொகுதிகளில் திமுகவை ஆதரித்தோம். மற்றப்படி அந்த கட்சியை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் நல்ல உறவு உள்ளது.
தேர்தல் முடிவுக்கு பின் மார்க்சிஸ்ட் பணிகளை பாராட்டுகிறேன். அவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யவில்லையே என்பதை உணர்கிறேன் என்று கருணாநிதி தெரிவித்தார். இந்த நோக்கில்தான் இரு கட்சிகளையும் பார்க்கிறோம்.
மாநிலத்தை பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து சில பிரச்சனைகள் உள்ளன. அதில் ஏற்பட்டுள்ள தவறுகளைதான் நாங்கள் சுட்டிக் காட்டி வருகிறோம். அதனால்தான் முரண்பாடும் ஏற்பட்டுள்ளது. திமுக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாபஸ் வாங்கவில்லை என்பதை கூறிக் கொள்கிறேன்.
அரசியல் நோக்கில் எங்கள் போராட்டங்களை பார்க்காமல், கோரிக்கை நோக்கில் பாருங்கள் என்று கேட்கிறேன். தமிழகத்தில் மூன்றாவதாக அமைய உள்ள கூட்டணிக்கு தலைமை வகிப்பது யார் என்பது போகப்போக முடிவு செய்யப்படும்.
காங்கிரஸ், பாஜக அணியில் இல்லாத பிற கட்சிகள் எங்கள் நிலை மீது காட்டும் பிரதிபலிப்பை பொறுத்துக் கூட்டணி இருக்கும். கூட்டணியில் சேர மற்ற கட்சிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுப்போம்.
அதிமுகவுடன் கூட்டணி?:
அதிமுக மதவாதக் கட்சியில்லை என்றாலும் ஜனநாயக அடிப்படையிலான செயல்பாடுகளில் அக்கட்சிக்கும் எங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால் அவர்களோடு கூட்டணி அமைக்க மாட்டோம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது.
ஆனால் இப்போது சூழ்நிலை மாறிவிட்டது. கொள்கை அடிப்படையில் 100 சதவீதம் ஒத்துப் போகும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்ற நிலையில் இருந்து நாங்கள் மாறியுள்ளோம்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொருளாதார கொள்கை, விலைவாசி உயர்வு, அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் மதவெறி ஆகிய 4 காரணங்களால் மட்டுமே இந்த முடிவை இடதுசாரிகள் எடுத்துள்ளன. இந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையை ஆதரிக்கும் அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம்.
மத்தியில் 3வது அணி அமைத்தால் அதன் தலைமை பொறுப்பை மாயாவதி ஏற்பார் என்பது ஏற்கக்கூடியது. தலித் பெண் ஒருவர் தலைமை பொறுப்பு ஏற்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி மகன் திருமணம் செப்டம்பர் முதல் தேதி சென்னையில் நடக்கிறது. எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் நான் கலந்து கொள்கிறேன். அந்த திருமண நிகழ்ச்சியில் அரசியல் முக்கியத்துவம் உள்ளது என்றார் வரதராஜன்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications