சென்னை-திருப்பதி மையத்திற்கு மாதம் 30,000 லட்டு
சென்னை: சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் அடுத்த மாதம் முதல் 30,000 லட்டுக்கள் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விற்பதற்காக இந்த லட்டுக்கள் வினியோகிக்கப்படவுள்ளன. இதுகுறித்து தேவஸ்தான ஆலோசனைக் கமிட்டி தலைவர் அனந்த குமார் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இங்கு ஒரு லட்டு ரூ. 25க்கு விற்கப்படும். மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை 15,000 லட்டுக்களும், 3வது சனிக்கிழமை 15,000 லட்டுக்களும் சென்னை மையத்திற்கு அனுப்பப்படும்.
தற்போது முதல் ஞாயிற்றுக்கிழமையன்று 10,000 லட்டுக்கள் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் வேகமாக லட்டுக்கள் விற்பனை ஆவதால் பக்தர்கள் ஏமாற்றமடைகின்றனர். இதைத் தவிர்க்க லட்டுக்களின் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டுள்ளது.
சென்னை தகவல் மையத்திற்கு லட்டுக்களின் எண்ணிக்கையை கூடுதலாக்குவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதவிர தமிழ் மாதமான புரட்டாசி மாதம் வரும் செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் 15,000 முதல் 20,000 லட்டுக்கள் வரை விற்கப்படும் என்றார்.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications