சென்னை நகர 2வது மாஸ்டர் பிளானுக்கு அரசு ஒப்புதல்
சென்னை: சென்னை மாநகருக்கான 2வது மாஸ்டர் பிளானுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து புறநர்ப் பகுதிகளில் அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்ட தடை நீங்கியுள்ளது.
சென்னையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னை பெருநகரத்தின் முதல் மாஸ்டர் பிளான் 1974ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் உருவாக்கியது. இதையடுத்து 2026ம் ஆண்டு காலத்தில்சென்னையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2வது வரைவு மாஸ்டர் பிளானை சிஎம்டிஏ கடந்த ஆண்டு தயாரித்தது.
அதில் கட்டடம் கட்டுவதற்கான பல்வேறு விதிகள் தளர்த்தப்பட்டிருந்தன. வேறு பல முக்கிய திட்டங்களும் அதில் இடம் பெற்றிருந்தது.
கடந்த ஓராண்டாக அனுமதிக்காக காத்திருந்த இந்த மாஸ்டர் பிளானுக்கு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஒப்புதல் அளித்தார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மாநகரினை மக்கள் வசிப்பதற்கு மிகவும் ஏற்ற பெருநகரமாகவும் பொருளாதாரத்தில் வலுவானதாகவும் தூய்மையான சுற்றுப்புறச் சூழல் நிறைந்ததாகவும் வருங்கால தலைமுறையினருக்கு நல்லதொரு சொத்தாகவும் உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் வரையப்பட்டுள்ள சென்னை மாநகரின் இரண்டாம் முழுமைத் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் நல்ல பயன் அளித்திடும் என்பதால் அதற்கு ஒப்புதல் அளிப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மாஸ்டர் பிளானுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதன் மூலம் பல நல்ல திட்டங்கள் நிறைவேறும். கட்டடம் கட்டுவதற்கு பல சலுகைகள் கிடைக்கும். மாநகராட்சிக்கு அப்பால் உள்ள இடங்களில் தரைத்தளம் மற்றும் 3 அடுக்குகளுக்கு மேல் கட்டடம் கட்ட இருந்த தடைகள் நீங்கும்.
சென்னைக்கு வெளியே புதிய தொழில் நகரம் அமையவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு












Click it and Unblock the Notifications