தலித்கள் கோவிலுக்கு செல்ல பாதுகாப்பு-உத்தரவு
சென்னை: ஆதிதிராவிட மக்கள கோவிலுக்குள் சென்று வழிபடவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கந்தம்பட்டி கிராமத்தில் திரௌபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபட ஆதி திராவிடர் மக்களுக்கு மற்றொரு சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இங்கு மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அமைதிக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பலமுறை பேச்சுவார்த்தையும் பிரச்சனைக்கு உரிய தீர்வு ஏற்படவில்லை.
இதனையடுத்து கோவிலுக்குள் ஆதி திராவிடர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்படாததை கண்டித்து ஊர்வலம் நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எச்சரித்தார். இந்த ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சத்யநாராயணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், கந்தம்பட்டி திரௌபதியம்மன் கோவிலை 4 வாரத்திற்குள் திறப்பதற்கு சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதி திராவிடர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய அவர்களுக்கு தேவையான முழு பாதுகாப்பு அளிக்க உள்துறை செயலாளர், கோட்டாட்சியர், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், இந்து சமய ஆணையர், இணை இயக்குனர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications