டாடா நானோ ஆலை நீடிக்க மே. வங்க மக்கள் விருப்பம்: சர்வே
மும்பை: மேற்கு வங்கத்தில் டாடாவின் நானோ தொழிற்சாலை திட்டம் நீடிக்க வேண்டும் என அம்மாநில மக்கள் கருதுவதாக என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
என்டிடிவி தொலைக்காட்சிக்காக ஜிஎப்கே-மோட் நிறுவனம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது. ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் 1525 பேர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு நகரங்கள், கிராமங்கள் மற்றும் சிங்கூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இது நடத்தப்பட்டது.
இவர்ளில் 75 சதவீதம் பேர் டாடாவின் நானோ தொழிற்சாலை மேற்கு வங்கத்தை விட்டுப் போகக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
டாடா நிறுவனம் மேற்கு வங்கத்திற்கு வந்திருப்பது மாநிலத்திற்கு நல்லது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டாடாவின் நானோ தொழிற்சாலைக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடந்து, நானோ ஆலை இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில் இந்தக் கருத்துக் கணிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டாடாவின் நானோ தொழிற்சாலைக்காக 1000 ஏக்கர் நிலத்தை டாடா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதில் 400 ஏக்கர் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே திரும்ப வழங்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரி வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
கருத்துகணிப்பில் கலந்து கொண்டவர்களில் 63 சதவீதம் பேர், மம்தா பானர்ஜி சமரசத்திற்கு உடன்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். 3ல் 2 பங்கு பேர் டாடா நிறுவனம் மேற்கு வங்கத்தை விட்டுப் போகக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
நானோ ஆலைக்கு சிங்கூர்தான் பொருத்தமானது என்று 68 சதவீதம் பேரும், இல்லை என்று 59 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications