Gold Rate Today: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. இன்றும் மிக பெரிய அதிர்ச்சி.. நகைப்பிரியர்கள் கவலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்றைய தினம் லேசான சரிவை சந்தித்தது. அதேநேரம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சரிவில் இருந்து மீண்டு தங்கம் விலை லேசாக உயர்ந்தது. இந்தியாவிலும் தங்கம் விலை இன்று லேசாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. இடையில் ஓரிரு நாடுகள் ஏறினாலும் கூட ஒட்டுமொத்தமாக தங்கம் விலை சரிந்தே வருகிறது. சர்வதேச சந்தை காரணமாகவே இந்தியாவிலும் தங்கம் சரிகிறது. இப்போது சர்வதேச மார்கெட்டில் ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,029 டாலராக வர்த்தகமானது. ஆகஸ்ட் மாத டெலிவரிக்கான அமெரிக்க கோல்ட் ஃபியூச்சர்ஸ் விலையும் 4,036 டாலராக முடிவடைந்தது.

Gold Price Gold Gold Rate Today

அமெரிக்கா

இதற்கிடையில், அமெரிக்காவின் 10 ஆண்டு கால அரசு கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் 0.4 சதவீதம் உயர்ந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பும் 0.2 சதவீதம் உயர்ந்ததால், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் தங்கம் வாங்குவது கூடுதல் செலவாக மாறியுள்ளது. இதுவும் தங்கம் மீதான தேவை ஓரளவு குறைய காரணமாக இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மீண்டும் ஈரான் நகரங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கு பதிலாக ஈரானும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.. அதேபோல், ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி படைகளும் சவுதி அரேபியாவுக்கு எதிராக கடற்படை முற்றுகையை அறிவித்துள்ளது. இப்படி வளைகுடாவில் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது.

வட்டி விகிதம்

இதன் காரணமாகவே சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏற ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை 80 டாலரை தாண்டிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு சர்வதேச பணவீக்கத்தை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்றும் வல்லுநர்கள் கருதுகிறார்கள். இதனால் அடுத்த பெடரல் ரிசர்வின் அடுத்த கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தாண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத கூட்டத்தில் அமெரிக்க பெடரல் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் என தெரிகிறது. அப்படி உயர்த்தும் போது தங்கம் விலை மேலும் சரியவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் வல்லுநர்கள்!

இன்றைய விலை

நேற்றைய தினம் சென்னையில் தங்கம் விலை லேசாக உயர்ந்திருந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ. 1,05,200க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.15 உயர்ந்து. ரூ.13,150க்கு விற்பனையானது.

இன்றைய தினமும் சென்னையில் தங்கம் விலை லேசாக உயர்ந்தது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.1,05,760க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து, ரூ.13,220க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.240க்கு விற்பனையாகிறது

தங்கம் - கடந்து வந்த பாதை

21-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,760

20-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200

19-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,080

18-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,080

17-07-2026- ஒரு சவரன்- ரூ.1,04,800

16-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200

15-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,440

14-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,200

13-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,600

12-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

11-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

10-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,800

9-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,560

8-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,600

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+