போலீஸாருக்கு 'வைத்தியம்' பார்க்கும் எஸ்பி!
ராமநாதபுரம்: உடல் நல பாதிப்பு என்று விடுப்பு எடுக்கும் போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை செய்கிறார் ராமதநாதபுரம் எஸ்பி. இதனால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போலீஸார் பொய் சொல்ல அஞ்சி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், ராம்நாடு, பரமக்குடி, கீழக்கரை, ராமேஸ்வரம், திருவாடனை, கமுதி என 6 டிஎஸ்பி அலுவலகங்களும், ஒரு ஏஎஸ்பி அலுவலகமும் இயங்கி வருகின்றன. அதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2000 போலீசார் பணியில் உள்ளனர்.
இவர்கள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றால் உடல்நல பாதிப்பு என்று கூறுவதை தவிர்த்து வருகின்றனர். காரணம் அம்மாவட்ட எஸ்பி செந்தில் வேலன். இவர் எம்பிபிஎஸ் படித்து பட்டம் பெற்ற டாக்டர். காவல்துறையை விரும்பி காக்கிக்கு மாறிய வெள்ளை கோட்.
எஸ்பி அலுவலகத்தில் பணி புரியும் போலீசாருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இவரே கூறி மருத்துவமும் பார்த்து விடுகிறார். உடம்பு சரியில்லை என்று நீண்ட நாள் விடுமுறை வேண்டும் என கேட்கும் போலீஸாரை எஸ்பி செந்தில் வேலன் அழைத்து உடல் பரிசோதனை செய்கிறார்.
இதனால் உடல்நிலை காரணம் காட்டி விடுப்பு எடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதனால் விடுப்பு எடுக்கும் போலீஸார் உடல்நலம் பாதிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை. டாக்டர் போலீஸ் சூப்பர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications